மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்குமாறு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் ஆகியவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். எனவே தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்குமாறு […]
