திருமயம் சோழ பாண்டியப் பேரரசுகளின் எல்லையாக இருந்த பகுதி. முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்ட வரலாற்று சின்னமாக மலைக்கோட்டை திருமயத்தில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் ஒரே சுற்றுச் சுவருடன் கூடிய இடத்தில் இருப்பது திருமயத்தில் சிறப்பு. மேலும் ஒரே கல்லில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலும் தொகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. திருமயம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக3 […]
