நம் இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாகக் கருதுகின்றனர். தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணத்தையே தவிர்க்கிறார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நுகர்வோரின் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கலாசாரமும் திருமண உறவுகளில் கொண்டு வரப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 38 வயதாகும் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு 34 வயது நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். 10 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். […]
