திருமண இணையதளத்தில் பதிவு செய்யப்படும் பெண்களை குறி வைத்து மோசடிகள் அதிகம் நடைபெறும் சூழ்நிலையில், இது போன்ற மோசடி நபர்களிடம் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “போலியான ஆப்கள் வாயிலாக டாக்டர் வரன் இருப்பதாக கூறி அந்த போலியான நபரை அறிமுகப்படுத்தி, உங்களிடம் தொடர்பு ஏற்படுத்தி பரிசு பொருட்கள் அனுப்புவார். அந்த பரிசு பொருள் ஏர்போர்ட்டில் வரும்போது கஷ்டமர் உங்களை தொடர்புகொண்டு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கூறுவார். […]
