மாணவிக்கு நடைபெற இருந்த கட்டாய திருமணத்தை காவல்துறையினர் நிறுத்தி வாலிபரை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மட்றம்பள்ளி கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகின்றார். இவர் பிளஸ்-2 படித்துள்ளார். அதே ஊரில் வசித்து வரும் செல்வன் மகன் ராஜேஷ் பெங்களூரில் செருப்புக்கடை ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்துவதற்கு குடும்பத்தினர் பேசி வைத்து இருந்தனர். ஆனால் 17 வயது மாணவி தனக்கு திருமணம் வேண்டாம் தான் படிக்க வேண்டும் […]
