தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சௌந்தரராஜப்பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை போலியானது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது சௌந்தரராஜப்பெருமாள் கோவில். இந்தக்கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை லண்டனில் உள்ள ஆஸ்மோரியன் அருங்காட்சியத்தில் இருப்பதாக இந்திய தூதரகம் மற்றும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் புதுச்சேரில் உள்ள பழைய ஆவணங்களில் உள்ள சிலைக்கும் […]
