திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் இதயவர்மன். திருப்போரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,93,251 ஆகும். மாமல்லபுரத்தில் படகுகளை நிறுத்துவதற்காக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்ற […]
