தம்பதியரை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம்- ஈஸ்வரி. ஆறுமுகம் அப்பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார் . இத்தம்பதியினரின் மகன் உதயகுமார். இவர் திருமணமாகி தனது மனைவியுடன் பல்லடத்தில் வசித்து வருகிறார் . இந்நிலையில் உதயகுமாருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இல்லை. இதனால் உதயகுமாரின் பெற்றோர் மகனுக்கு குழந்தை […]
