எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலைமை இருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடந்த நக்கீரர் தமிழ் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம் எந்த ஊரை மறந்தாலும் மதுரையை மறக்கக்கூடாது. தற்போது எங்கு பார்த்தாலும் ஆங்கில வழிக் கல்விதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழர்களுக்கு தமிழர்களாக அதிக அளவிற்கு உதவுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாக உதவுங்கள். இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் நிம்மதி இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . […]
