மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் கமலம்மாள்(80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது கணவரின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜோலார்பேட்டையில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய பெண் கமலம்மாவிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் […]
