திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று பகல் 2.45 மணிக்கு கார் மூலமாக திருப்பதி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை கீழ்த் திருப்பதியில் இருக்கின்ற பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தபிறகு திருப்பதி மலைக்கு புறப்பட்டார். அங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகிய இருவரும் அவரை வரவேற்றனர்.இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]
