திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]
