திருபுவனை பாளையம் பாலாஜி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரது மனைவி செண்பகவள்ளி (38) நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த செண்பகவள்ளி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதனால் உறக்கத்தில் இருந்து எழுந்த செண்பகவள்ளி கூச்சல் […]
