மாமியார் மற்றும் கணவர் செய்த கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருபுவனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் காலனியை சேர்ந்தவர் மதிராஜா (30) என்பவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமலா என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மதி ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. அதனை மறைத்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து கொண்டது அமலாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி அமலா தன் கணவரிடம் கேட்டபோதுஅவர் அமலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். […]
