மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சிபாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த ஆண் யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், அந்த யானைக்கு […]
