மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வந்துள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைத்து காவல் துறையினர் சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். […]
