சென்னை மதுரவாயலில் திருநங்கை போல வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திருநங்கை ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். திருநங்கையை அவரது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவர் கேட்ட இடத்தில் சத்தியமூர்த்தி இறக்கிவிட்டுள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது […]
