திருத்துறைபூண்டி தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், பொங்கு சனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புனித தலங்கள் உள்ளன. உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதி இது. தற்போது திமுகவின் ஆடலரசன் எம்எல்ஏவாக உள்ளார். திருத்துறைப்பூண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,39,136 […]
