போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏகே. விசுவநாதன் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். […]
