திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. […]
