அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல […]
