ராணுவ அதிகாரி வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குமணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ராணுவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய குமணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்ற அவர் வீட்டிலுள்ள பொருட்கள் சிதறிக் கிடந்ததை பார்த்துள்ளார். […]
