வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சின்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பாட்டியை அழைத்து வந்தார். அப்போது பாட்டியை வங்கிக்குள் விட்டு அஜய் செல்போனில் பேசியபடி வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்த வேளையில் திடீரென அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் அஜய்யிடம் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். […]
