வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிசென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் ஸ்ரீவாரி நகர் பிரியங்கா தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது சகோதரியை பார்ப்பதற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மீண்டும் தன் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் மணிகண்டன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த […]
