விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள குண்டாறு பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருகின்றன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கண்ணன் உத்தரவின்படி சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாரின் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு மணல்திட்டு தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குச்சம்பட்டிபுதூர் கிராமத்தில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி […]
