அலுவலகங்கள் வீடுகளில் சார்ஜ் போட்டு வைத்திருக்கும் செல்போன்கள், லேப்டாப்களை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், ஆர். எஸ். புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது தனியார் மருத்துவமனை அருகில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கண்காணித்தபோது மருத்துவமனைகள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததார். உடனே காவல் துறையினர் அவரைக் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பொள்ளாச்சியில் வசித்த 45 வயதுடைய சசிகுமார் என்பதும், வீடுகள், அலுவலகங்களில் […]
