திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபாதி முன் மண்டப நுழைவு வாயில் பகுதியில் கல் நிலை அமைக்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கி கல்லை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். […]
