திருச்சி மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சாந்தி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நவம்பர் 16ஆம் தேதி அன்று வயிற்றை சுத்தம் செய்கிறேன் என்று சாந்தி, குழந்தைக்கு 2 சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து குழந்தையை, சாந்தி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன்பின் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். […]
