இ-பாஸ் முறையை ரத்து செய்யவும், ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதை கண்டித்தும், வாடகை வாகன ஓட்டுனர்கள் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓட்டுனர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகை வசூலிப்பதை கண்டித்தும், […]
