திருக்குறளை தலைகீழாக எழுதிய ஓட்டுநருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் சோழன் புத்தக நிறுவனம் மற்றும் வள்ளுவர் பேரவை சார்பில் திருக்குறளை தலைகீழாக எழுதும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாட்டுசேரிப் பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான கார்த்தியமூர்த்தி என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதில் கார்த்தியமூர்த்தி 1330 திருக்குறளையும் தலைகீழாக 17 மணிநேரம் 19 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். அதன்பின் அவருக்கு நடைபெற்ற பாராட்டு […]
