திருக்கழுக்குன்றம் அருகில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் கருணாகரன்- காயத்ரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கருணாகரன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கருணாகரன்- காயத்ரி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயத்ரி உறங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கருணாகரன் மற்றொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். […]
