ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013 ஆம் வருடம் திரைக்கு வந்த மலையாள திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்து அனைத்து மொழி திரை உலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. பாலியல் தொல்லை கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி மகனை கொலை செய்த தன்னுடைய மகளை காப்பாற்ற போராடும் தந்தையை பற்றிய கதையாக திரிஷ்யம் திரைப்படம் உருவாகியிருந்தது. ரூபாய்.5 கோடி செலவில் தயாராகிய இப்படம் ரூபாய்.75 கோடி வசூல் செய்து இருந்தது. […]
