சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்றும் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சூலத்தை ஏந்தி நின்று அருள்புரிவதால் சிவபெருமான் சூலபாணி என்றும், சூலதரர் என்றும் அழைக்கப்படுகிறார். திரிசூலம், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கி அவற்றிற்கு மோட்சத்தை அருள்கிறது. அது ஞானத்தை வழங்குவதாகவும் உள்ளது. அஸ்திரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதால் அதனை அஸ்திர ராஜன் எனவும் அழைப்பர். பகைவர்களை வென்று சுகமாக […]
