திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணியின் 90 வது பிறந்தநாள் விழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கி. வீரமணியை பாராட்டி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நூற்றாண்டை கடந்தும் வீரமணிக்கு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை […]
