விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செந்தில்குமார் நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியானது பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் உயரம் மற்றும் நீளம் தாண்டுதலில் திரளான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.
