தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் கீழப்பாவூரில் நரசிம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் காலை வேளையில் தெப்பக்குளத்திற்கு பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கலசத்தில் வர்ண ஜெபம் போன்றவை நடைபெற்றது. அதன் பின் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அங்கு அவருக்கு விசேஷ அபிஷேகமும் உற்சவமூர்த்தியுடன் தீர்த்த வாரியம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலையும் தெப்பக்குளத்தையும் வலம் வருதலும் நடைபெற்றது. அதன் […]
