தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகைகளை நடத்தினர். திருச்சியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த தியாக திருநாளில் அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சேலம் சங்கர் நகரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். சமூக இடைவெளி கடைபிடித்து […]
