முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் இணையவழி பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் சேலத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் இணையவழி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வின் சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 580 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் […]
