செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஏற்கனவே நந்தம்பாக்கத்தில் 950 படுக்கைகளுடன் ஆன கொரோனா நல மையம், ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு 700 படுக்கைகள் என்கின்ற வகையில் இந்த கொரோனா நல மையங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதுமட்டுமல்லாது 2000 படுக்கைகளை அத்திப்பட்டு என்கின்ற இடத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கான, அந்த ஏற்பாட்டையும் செய்யப்பட்டிருக்கிறது. […]
