பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.க தொண்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பாக அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க தொண்டர் ஒருவர் மதன கோபாலபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க வெற்றி வேட்பாளரான சேகர் என்பவரது வீட்டு சுவரில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான சுவரொட்டியை ஒட்ட சென்றுள்ளார். […]
