4 கிரவுண்டு இடத்தை அபகரிக்க இடைஞ்சலாக இருந்ததால் திமுக வட்ட செயலாளரை கொலை செய்தோம் என்று கூலிப்படை தலைவன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை மாநகராட்சி 188 ஆவது வார்டு திமுக வட்ட செயலாளர் செல்வம் என்பவரை கூலிப்படையினர் கொலை செய்துள்ளனர். இதையடுத்து கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட தனிப்படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]
