திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]
