மதுரை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை. இவர் திமுக கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருநெல்வேலி […]
