திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்குள் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவருக்கு பாஜக-வினர், இந்துஅமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இந்துமதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இந்த கருத்தை கண்டித்து இருக்கின்றனர். இது போன்று திமுக தலைவர்கள் பேசுவது தமிழகத்தில் புதுசு கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை […]
