ஆசிய பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் 140 கிலோ எடைப்பிரிவில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் . ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி துருக்கியில் நடைபெற்றது .இதில் இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா பங்கு பெற்றார் .இவர் சமீபத்தில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார் .இதையடுத்து ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . […]
