செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் 11-வது […]
