திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி […]
