நிலைதடுமாறி ரயிலில் விழுந்து வாலிபர் கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமார் ரயிலில் தூங்கிவிட்டார். இதனையடுத்து ரயில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த வினோத்குமார் ரயிலை விட்டு இறங்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ரயிலுக்கு இடையே காலை […]
