நேற்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்ட நிலையில் ஐந்தாவது கட்டமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹோட்டல்களில் பார்சல் மூலம் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருந்த நடைமுறை மாற்றப்பட்டு, நேற்றிலிருந்து ஹோட்டலில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது. […]
