திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் உள்ள சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் தக்காளி சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளிகள் சராசரியாக 5 டன் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏராளமான விவசாயிகள் அய்யலூரில் நேற்று நடைபெற்ற சந்தையில் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு தக்காளிகள் பெட்டி, பெட்டியாக குவிந்தது. தக்காளி […]
